தமிழக அரசியலில் தற்போது அதிகம் பேசப்படும் கேள்வி — “தமிழக வெற்றி கழகம் அதிமுகவுடன் கூட்டணி அமைக்குமா?” என்பதாகும். இதற்கான பதிலை நாமக்கல் பொதுக்கூட்டத்தில் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் அவர்கள் தாமே தெளிவாகக் கூறியுள்ளார்.

கூட்டத்தில் பேசிய அவர், “பேருக்கு அம்மா, அம்மா என சொல்லிக்கொண்டு, ஜெயலலிதா மேடம் சொன்ன விஷயங்களை எல்லாம் மறந்துட்டீங்க. ஒரு பொருந்தாத கூட்டணியைப் அமைத்துள்ளீர்கள், கேட்டால் ‘தமிழ்நாட்டின் நலனுக்காக பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கிறோம்’ என சொல்லுகிறீர்கள். அவங்கள மாதிரி நாங்கள் இருக்க மாட்டோம். நான் கேட்கிறேன் — இந்த பாஜக அரசு தமிழ்நாட்டுக்கு என்ன செஞ்சுட்டாங்க?” எனக் கடுமையாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

“>

 

விஜயின் இந்த கூற்று, அதிமுக–பாஜக கூட்டணியை நேரடியாக சுட்டிக் காட்டுவதாக நெட்டிசன்களும் அரசியல் வல்லுநர்களும் கூறி வருகின்றனர். சமூக வலைதளங்களில் தற்போது அந்த வீடியோ வைரலாகி, “இதுவே சாட்சி — அதிமுக பாஜகவுடன் கூட்டணியில் தொடரும் வரை, தமிழக வெற்றி கழகம் அதிமுகவுடன் இணையும் வாய்ப்பே இல்லை” என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.