பிரபல யூட்யூபர் மதன் கௌரியைச் சுற்றி தற்போது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. சிலர், அவர் பிற கட்சிகளின் ஐடி குழுக்களிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டு நடிகர் விஜய் அவர்களுக்கு எதிராக திட்டமிட்ட வகையில் பேசி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுப்பியுள்ளனர்.

இதையடுத்து, தமிழக வெற்றி கழகத்தினரும் விஜய் ஆதரவாளர்களும் மதன் கௌரியை குறிவைத்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து, “இது உண்மையா? நீங்களும் எங்களுக்கு எதிராக திரும்பிவிட்டீர்களா?” என்று கேள்விகள் எழுப்பினர்.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலாக, மதன் கௌரி விஜய் நடித்த சச்சின் திரைப்படத்தின் ஒரு காட்சியை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். அந்த காட்சியில் விஜய் கூறும் “ஒரு விஷயத்தை நம்புவதற்கு முன்பு — இதை இவன் செய்திருப்பானா, மாட்டானா என்று யோசியுங்கள்; அதன் பிறகு என்னிடம் கேள்வி கேளுங்கள்” என்ற வசனம் பலரது கவனத்தை ஈர்த்தது.

“>

 

பின்னர், தனது YouTube சேனலில் விளக்கமளிக்கும் வீடியோ ஒன்றையும் வெளியிட்ட மதன் கௌரி, “கரூர் துயரச் சம்பவம் நடப்பதற்கு முன்பே நான் எங்கள் அண்ணனை ஆதரிக்கும் பதிவு ஒன்றை போட்டிருந்தேன், அதை இன்று வரை நீக்கவில்லை. அப்படியிருக்கையில், காசு வாங்கி அண்ணனை எதிர்த்து பேசுவேனா?” என்று கேள்வி எழுப்பினார்.

அவரது விளக்கத்திற்குப் பின், விஜய் ரசிகர்களும் தமிழக வெற்றி கழக ஆதரவாளர்களும் மீண்டும் மதன் கௌரிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.