பிரேசிலின் ரியோ நெக்ரோ நதியில், ஆழமான காயங்களுடன் நீந்திக்கொண்டிருந்த ஜாகுவார் ஒன்றை உள்ளூர் மக்கள் முதலில் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தகவல் தெரிவித்ததையடுத்து, இராணுவ போலீசார் மற்றும் வனவிலங்கு மருத்துவர்கள் இணைந்து திட்டமிட்ட நடவடிக்கையில் அந்த மிருகத்தை தண்ணீரில் மிதக்கும் தோணியில் வைத்து கரை சேர்த்து மீட்டனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Brut India (@brut.india)

ஜாகுவார் பலத்த தளர்வுடன் இருந்ததோடு, அதை பல இடங்களில் துப்பாக்கி மூலமாக காயப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்பின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியுள்ளது. அதில், நீரின் நடுவே மிகுந்த ஜாகுவாரின் கண்களில் தெரியும் பயமும் ஏக்கமும், நெஞ்சை பிளக்கும் நிலையில் உள்ளது.

தற்போது, அந்த விலங்கு ஒரு சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறது என்றும் அதன் நிலைமை ஆபத்தானபோதிலும், மீண்டும் பழைய நிலைமைக்கு வரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் பின்னணியில் சட்டவிரோத வேட்டையோ அல்லது மனித-விலங்கு மோதலோக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.