தமிழகத்தில் இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் பரவி வருவதால் பொதுமக்கள் தூய்மையான குடிநீர், குப்பை இல்லா நகரமாக வைத்துக்கொள்ள தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
டெங்கு காய்ச்சல் பாதிப்பால் சென்னை, திருவள்ளூர், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் டெங்கு காய்ச்சலால் இதுவரை 3,665 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதே போன்று திருவள்ளூரில் 1,171 பேருக்கும் கோயம்புத்தூரில் 1,278 பேருக்கும் டெங்கு பாதிப்பு இருப்பதாகவும் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
எனவே பொதுமக்கள் தங்களது சுற்றுப்புற இடங்களை தூய்மையாகவும், சுகாதாரமான குடிநீரையும் இலக்காக வைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
மேலும் அரசு டெங்கு பாதிப்பு குறித்த விழிப்புணர்வு சிறப்பு முகாம்களை நடத்தி வருவதாகவும் டெங்கு பாதிப்புகளை தொடர்ந்து குறைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
