இந்தியாவில் புத்திசாலித்தனமான, படைப்பாற்றல் மிக்க நபர்கள் ஏராளம். இப்போது, அதற்கான உதாரணமாக  ஒரு ஆட்டோ ஓட்டுநரின் சுயதிறமை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் “auto_anji_” என்ற பக்கத்தில் பகிரப்பட்ட வீடியோவில், ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது ஆட்டோவையே ஒரு நகரும் பசுமை தோட்டமாக மாற்றியுள்ளார். ஆட்டோவின் கூரையிலிருந்து பக்கவாட்டு பகுதிகளுக்கும் சிறிய தொட்டிகளில் பசுமை செடிகள் நடப்பட்டுள்ளன. சில இடங்களில் பூந்தொட்டிகளில் வண்ணமயமான மலர்களும், மற்ற இடங்களில் தொங்கும் செடிகளும் கண்கவர் அழகுடன் உள்ளன.

அதுமட்டுமல்லாமல், அவர் ஆட்டோவில் ஒரு குடிநீர் குழாயையும் நிறுவியுள்ளார். பயணிகளுக்காக அமைக்கப்பட்ட இந்த வசதி, சுகாதாரத்தையும் பசுமையையும் ஒரே நேரத்தில் வெளிப்படுத்துகிறது. இந்த பசுமை ஆட்டோவின் சிறப்பம்சங்களில் ஒன்று – அது சூழலுக்கு சாதகமானது மட்டுமல்லாமல், சமூக சேவையிலும் முன்னேறுகிறது. வீடியோவில், அந்த ஆட்டோ ஓட்டுநர் ஒரு ஏழை முதியவருக்கு தனது மதிய உணவை வழங்குவதை காணலாம்.

 

 

View this post on Instagram

 

A post shared by Auto Anji (@auto_anji_)

இந்த வீடியோ இணையத்தில் வெளியான சில நாட்களிலேயே 1.9 மில்லியன் பார்வைகள் மற்றும் 62,000-க்கும் மேற்பட்ட விருப்பங்கள் பெற்று, சமூக ஊடக பயனாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பலரும் “இது ஒரு பச்சை ஆட்டோ; இத்தகைய சவாரி வேறு மாதிரி அனுபவமாக இருக்கும்!” என்றும், “இந்த ஆட்டோ இருக்கையில் உட்கார்ந்தால் ஆக்ஸிஜன் சிலிண்டர் தேவையே இல்ல” என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

சிலர் இது போன்ற பசுமை முயற்சிகள் நகரங்களில் பரவலாக பயன்பாட்டில் வந்தால், காற்று மாசுபாட்டை குறைக்கும் என்றும், பசுமையைப் பெருக்கும் என்றும் பாராட்டுகின்றனர். மேலும் இது போன்ற முயற்சிகள், நகர வாழ்வில் நம்மை சுற்றியுள்ள சூழலை பாதுகாப்பதோடு, மனித நேயத்தை வளர்க்கும் வழிகளாகவும் அமைவது குறிப்பிடத்தக்கது.