தமிழக முதலமைச்சர் விஜய் சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்குத்  நேரில் சென்று அதிரடியாகத் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

முன்னறிவிப்பு ஏதுமின்றி, அரசு அதிகாரிகளுடன் மருத்துவமனைக்கு வந்த முதல்வர் விஜய், அங்குள்ள வார்டுகளுக்கு நேரடியாகச் சென்று நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

குறிப்பாக, குழந்தைகளுக்கு அளிக்கப்படும் மருத்துவ வசதிகள், மருந்துப் பொருட்களின் இருப்பு மற்றும் மருத்துவமனையின் தூய்மைப் பராமரிப்பு ஆகியவற்றை அவர் நேரில் பார்வையிட்டுத் தீவிரமாக ஆய்வு செய்தார்.

அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களிடம் பணிகளைத் தொய்வின்றி செய்ய அறிவுறுத்தியதுடன், சிகிச்சைக்கு வந்திருந்த குழந்தைகளின் பெற்றோர்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார்.

முதலமைச்சரின் இந்தத் திடீர் விசிட் சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.