மேற்கு வங்க மாநிலம் பரூய்பூர் சம்பவத்தைக் கண்டித்துத் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் தலைவரும், மாநில முன்னாள் முதலமைச்சருமான மம்தா பானர்ஜி கையில் மைக் பிடித்து இந்தத் போராட்டத்தை முன்னின்று நடத்திக் கொண்டிருந்தார்.
அப்போது, காளிகாட்டில் உள்ள அவரது இல்லத்திற்கு வெளியே திடீரெனக் கூடியிருந்த கூட்டத்தில் பெரும் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டுத் தள்ளுமுள்ளு உருவானது.
சூழலைக் கட்டுப்படுத்துவதற்காக மம்தா பானர்ஜி உடனடியாக மேடையை விட்டு கீழே இறங்கிச் சென்றார். அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த ஒரு நபரை அவர் திடீரெனக் கன்னத்தில் அறைந்ததாகக் கூறப்படுகிறது.
टीएमसी विरोध प्रदर्शन के दौरान पूर्व सीएम ममता बनर्जी को आया गुस्सा, अपने कार्यकर्ता को ऐसे मारा तमाचा, पता नहीं किस बात का है इतना गुस्सा #TMC #mamataBanerjee #WestBengal pic.twitter.com/Sa1NMJrVF3
— Rajesh Kumar/राजेश कुमार/راجیش (@rajeshemmc) July 8, 2026
மம்தா பானர்ஜி ஒருவரைத் தாக்கும் இந்த பகீர் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது. முதற்கட்ட தகவல்களின்படி, மம்தாவிடம் அடி வாங்கிய நபர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தீவிரத் தொண்டர் எனத் தெரியவந்துள்ளது.
கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த முயன்றபோது ஏற்பட்ட ஆத்திரத்தில் அவர் இவ்வாறு செய்ததாகக் கூறப்படும் நிலையில், டிஎம்சி கட்சி இதுவரை இதுகுறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கவில்லை.
இந்தச் சம்பவத்தை கையில் எடுத்துள்ள பாரதிய ஜனதா கட்சி, மம்தா பானர்ஜிக்கு எதிராகக் கடுமையான அரசியல் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து அதிருப்தி தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் சுகாந்தா மஜும்தார், “தேர்தல் தோல்விக்குப் பிறகு மம்தா பானர்ஜியின் நடத்தை முற்றிலும் மாறிவிட்டது; இத்தகைய வன்முறைச் செயல்கள் பொதுமக்களுக்குத் தவறான செய்தியைக் கொண்டு சேர்க்கும்” என்று சாடியுள்ளார்.
மம்தாவின் இந்த அதிரடி ஆக்ஷன் மேற்கு வங்க அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகின்றன.
