உத்தரபிரதேசம் மாநிலத்தின் சீதாபூர் மாவட்டம் மஹ்முதாபாத் தாலுகாவில் வியப்பூட்டும் ஒரு புகார் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தனது மனைவி இரவுகளில் பாம்பாக மாறி நடந்து தன்னை பயமுறுத்துவதாக ஒருவரால் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதாவது மஹ்முதாபாத் தாலுகாவின் லோதாசா கிராமத்தை சேர்ந்த மேராஜ் என்பவர் ராஜ்பூரைச் சேர்ந்த நசீமுன் என்பவரை மேராஜ் திருமணம் செய்து கொண்டுள்ளார். கடந்த சனிக்கிழமை, மாவட்ட நீதிபதி அபிஷேக் முன்னிலையில் ஆஜராகிய மேராஜ், தனது மனைவியின் மனநிலை சரியில்லை எனக் கூறியதுடன், “இவர் இரவில் பாம்பாக நடந்து தன்னை பயமுறுத்துகிறாள். தூங்க முடியாமல் இருக்கிறேன்” என்றார்.

மேலும், “இதுபோன்ற இயல்புக்கு மீறிய நடத்தை குறித்து அவரது பெற்றோருக்கு முன்கூட்டியே தெரிந்திருக்க வேண்டும். இருந்தும் என்னை திருமணம் செய்ய வற்புறுத்தி என் வாழ்க்கையை நாசமாக்கினர்,” என்றும் அவர் குற்றம்சாட்டினார். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து விசாரிக்க கோட்வாலி போலீசாருக்கு அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
