மகாராஷ்டிரா மாநிலத்தில், மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்ற இளைஞர் ஒருவர், தனது தாயுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடிய நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமூக ஊடகங்களில் வெளியாகிய வீடியோவின்படி, விவாகரத்து முடிவடைந்ததையடுத்து, இளைஞரது தாய், மகனுக்கு பாலபிஷேகம் செய்து, புது ஆடைகளை அணிவித்து, கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். இதனை “புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கும் நாள்” எனக் குறிப்பிட்டு கொண்டாடியுள்ளனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Biradar DK (@iamdkbiradar)

அந்த  இளைஞர் தனது மனைவியிடம் இருந்து விவாகரத்துடன், அவர் கொண்டு வந்ததாகக் கூறப்படும் 120 கிராம் தங்க நகையும், ₹18 லட்சம் பணமும் திருப்பி வழங்கியதாக கூறப்படுகிறது. விவாகரத்துக்குப் பிறகு சிங்கிளாக இருப்பது இனிமையாக உள்ளது எனவும், வாழ்க்கையை முன்னோக்கி நகர்த்தத் தயார் எனவும் இளைஞர் தனது சமூக ஊடகப் பதிவுகளில் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளதுடன், அவரின் தீர்மானத்திற்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர். மேலும் சிலர் இதனை பிரத்தியேகமான உரிமைச் செயல் என பாராட்டியிருப்பதுடன், சிலர் விவாகரத்து என்பது கொண்டாடப்படவேண்டிய விஷயமா? என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர்.