கரூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் பல உயிரிழப்புகள், அவரது அரசியல் பயணத்தில் பெரும் பின்னடைவாக  கருதப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து விஜய் மிகவும் நிதானமாக நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். இதுவரை அவர் மூன்று அறிக்கைகள் மற்றும் ஒரு வீடியோவின் மூலமாக மட்டுமே தனது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளார். அதுமட்டுமன்றி, ஊடக சந்திப்புகளிலும் அவர் பங்கேற்காமல் இருந்து வந்தார்.

இந்த நிலை தொடர்ந்தால், கட்சியின் மீதான மக்கள் நம்பிக்கையையும், செயல்பாட்டையும் பாதிக்கும் அபாயம் உள்ளது என தவெக நிர்வாகிகள் விஜய்யிடம் நேரில் தெரிவித்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு, விஜய் தற்போது தனது மௌனத்தை முறியடித்து, ஊடகங்களை நேரில் சந்திக்க முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், கரூருக்கு செல்லும் முன், தற்காலிகமாக ஊடக சந்திப்பு நடத்தும் திட்டத்தை விஜய் எடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த முடிவால் தவெக கட்சியின் செயல் இயக்கத்திற்கு புத்துயிர் ஏற்படும் எனக் கணிக்கப்படுகிறது.