மத்தியப் பிரதேசம், தேவாஸ் மாவட்டத்தில் உள்ள பகுதியில் இயங்கும் அரசு தொடக்கப் பள்ளியில் நடந்த ஒரு சம்பவம், முழு ஊரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வகுப்பறையில் ஆசிரியை உடன் ஆபாச நிலையில் பிடிபட்ட ஆசிரியர், அதே பள்ளி மாணவர்களாலேயே வீடியோ எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பரவி சமூகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவம் ஞாயிறன்று வெளிவந்தாலும், இந்த வீடியோ சில நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கிராமப்புறம், பிசாலி கிராம பஞ்சாயத்தில் உள்ள ஜீறி மொஹல்லா அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் விக்ரம் கடம் மீது இது போன்ற பழக்கங்கள் ஏற்கனவே இருந்ததாக கிராம மக்கள் புகார் கூறுகிறார்கள். “பள்ளியில் முன்பே புகார் கொடுத்தோம், ஆனா எந்த நடவடிக்கையும் இல்ல. இரண்டு நாள்களுக்கு முன்னாடியே கிராம தலைவர், துணை தலைவர் அவங்க சொல்லியும் கேக்கல”ன்னு மக்கள் கோபமாக தெரிவிக்கிறார்கள்.
இந்நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியர் விக்ரம் கடம், “இந்த வீடியோ உண்மையல்ல… AI டெக்னாலஜி பயன்படுத்தி எனக்கு எதிராக வேறு யாரோ உருவாக்கிய வீடியோ” என்று சமுக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டு தன்னைத் தானே காப்பாற்ற முயற்சி செய்துள்ளார். மாவட்டக் கல்வி அலுவலர் ஹரிசிங் பாரதி, “சம்பவம் பற்றி நாங்கள் தெரிந்து கொண்டுள்ளோம். விசாரணைக்காக குழு அமைக்கப்படும். குற்றம் உறுதியாகினால், உடனடியாக பணிநீக்கம் செய்யப்படும்” என்று அறிவித்துள்ளார்.
