பொதுவாக பாம்புகள் என்றால் பயம் தான் முதலில் நினைவிற்கு வரும். அதிலும் நாகப்பாம்பு போல விஷமுள்ள பாம்புகள் எதிர்பட்டால், பெரும்பாலானோர் பதற்றமடைந்து விடுவார்கள். ஆனால் உலகில் சில பகுதிகளில், இவை உணவாகவே பயன்படுகிறது என்பதே ஆச்சரியமாக உள்ளது.

இந்தோனேசியாவில் உள்ள ஒரு சந்தையில் பதிவுசெய்யப்பட்ட வீடியோ ஒன்று சமீபத்தில் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. இதில், நாகப்பாம்புகள் மற்றும் பிற விஷ பாம்புகளை கடைக்காரர்கள் வெளியே எடுத்து வாடிக்கையாளர்களுக்குக் காட்டும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

 

 

View this post on Instagram

 

A post shared by Backpacker Sudhi (@backpacker_sudhi)

 

வீடியோவில், ஒரு கடைக்காரர் மூடிய பெட்டியிலிருந்து ஒரு நாகப்பாம்பை எடுத்து காட்டுகிறார். அதனுடன், பல பாம்புகள் ஒரு பையில் அடைக்கப்பட்டிருக்கும் காட்சியும் காணப்படுகிறது. நாகப்பாம்பு  உயிருடன் இருக்கிறது இருந்தும் கடைக்காரர் பயமில்லாமல் செயல்படுகிறார். இதில், பாம்புகளை விற்று, அவற்றை இறைச்சியாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் நிலை தெளிவாக காணப்படுகிறது.

இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் @backpacker_sudhi என்ற கணக்கில் பதிவிடப்பட்டுள்ளது. இதுவரை 3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்று, 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விருப்பம் தெரிவித்துள்ளனர். பலரும் அதிர்ச்சியுடன் தங்கள் கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.

ஒருவர், “இவர்கள் மரணத்தோடு விளையாடுகிறார்கள் போல. இத்தனை தைரியம் எங்கே இருந்து வருகிறது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். மற்றொருவர், “இது எங்களுக்கு பயமாக இருக்கலாம். ஆனால் இவர்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஏற்றிருக்கலாம்,” என பதிவிட்டுள்ளார். மேலும், ஒருவர் நகைச்சுவையாக, “நாமோ நூடுல்ஸ் சாப்பிடும் போதே பயணத்தில் தொலைந்து போகிறோம். இவர்கள் நாகப்பாம்புகளையே சாப்பிடுகிறார்கள்!” என கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தோனேசியாவில் பாம்பு இறைச்சி உணவாக பரவலாக இருக்கிறது. அங்கு நாகப்பாம்புகள் போன்ற விஷமுள்ள பாம்புகளையும் மக்கள் சமைத்து உண்ணும் கலாசாரம் நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.