உலகின் மிகவும் விஷமுள்ள பாம்பு இனங்களில் ஒன்றான பஃப் ஆடர்ஸ் பாம்புகளை, அச்சமின்றி வேட்டையாடி, கொன்று உண்கிற பறவையின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஆப்பிரிக்கா கண்டத்தை பூர்வீகமாகக் கொண்ட தெற்கு தரை ஹார்ன்பில் (Southern Ground Hornbill) என்ற இந்த பறவை, பாம்புகள் தாக்குதல் நடத்தி, அவற்றை ஆற்றலில் வெல்வதை வீடியோவில் பார்க்க முடிகிறது.
Puff adders are responsible for more human fatalities in Africa than any other snake.
No such problems for the Southern Ground Hornbill.pic.twitter.com/7oYpO5RGRX
— Damn Nature You Scary (@AmazingSights) October 4, 2025
வெறும் ஒரு நிமிடம் 19 வினாடிகள் நீளமுள்ள இந்த வீடியோ, சமூக வலைதளமான X-இல் @AmazingSights என்ற கணக்கிலிருந்து பகிரப்பட்டதாகும். இதில், “ஆப்பிரிக்காவில் மனித உயிரிழப்புக்குக் காரணமான பாம்பு பஃப் ஆடர்ஸ் தான். ஆனால், இந்த பறவைக்கு அவை அச்சமாக இல்லை” என்ற குறிப்பும் இடம் பெற்றுள்ளது.
இந்த வீடியோ இதுவரை 35,000-க்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டு, பலநூறு நெட்டிசன்களின் பாராட்டும், பகிர்வும் பெற்றுள்ளது. ஒரு நெட்டிசன் கருத்து கூறுகையில், “இதுதான் இயற்கையின் உண்மையான சமநிலை,” என தெரிவித்தார்.
மற்றொருவர், “இப்போது பாம்புகள் கூட, ‘கடவுளே, அவற்றிலிருந்து எங்களைக் காப்பாற்று’ என்று சொல்லும் நிலை வந்துவிட்டது,” என நகைச்சுவையாக பதிவிட்டார்.
பஃப் ஆடர்ஸ் பாம்பு, ஆப்பிரிக்காவில் வருடத்திற்கு பல நூற்றுக்கணக்கான உயிரிழப்புகளுக்கு காரணமான ஒரு மிகப்பெரிய அபாயம். ஆனால், ஹார்ன்பில் பறவைகளுக்கு இது பெரிதாக கவலையை ஏற்படுத்தவில்லை.
தரையில் நடமாடும் இந்த ஹார்ன்பில்களின் அலகுகள் நீளமாகவும் கூர்மையாகவும் இருப்பதால், பாம்புகளின் தாக்குதல்களையும் சுலபமாகத் தவிர்த்து, தாக்கக் கூடியவையாக உள்ளன. பாம்புகள் எதிர்த்துப் போராடும் முன்பே, ஹார்ன்பில்கள் அவற்றை நொடியில் வேட்டையாடுகின்றன. மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
