“காந்தாரா: சாப்டர் ஒன்” திரைப்படம் வெளியான சில நாட்களிலேயே இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் இந்தப் படம் ஒரு பெரும் கொண்டாட்டமாக மாறியுள்ளது.

“இப்படி ஒரு படம் தமிழ் சினிமாவில் இதுவரை வந்ததில்லை, இனி வரப்போவதும் இல்லை” என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டுகள் மழையிட்டு வருகின்றனர்.

பலர் இந்தப் படத்தை மிகுந்த தெய்வீக உணர்வுடன் அனுபவித்ததாகவும், “படம் பார்க்கும்போது நான் காலணிகளை கூட கழட்டி வைத்தேன்; அந்த அளவுக்கு புனித உணர்வை ஏற்படுத்தியது” என தெரிவித்துள்ளனர். மறுபுறம், சிலர் இந்தப் படத்தில் மூடநம்பிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் காட்சிகள் உள்ளதாகவும், நம்பிக்கைகளை திணிப்பதாகவும் விமர்சித்து வருகின்றனர்.

“>

இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த இயக்குனர் ரிஷப் செட்டி, “எனக்கு கடவுள் மீது நம்பிக்கை அதிகம். அதனால் இதை மூடநம்பிக்கை என சொல்லுவது எனக்கு ஏற்றதாக இல்லை. சிலருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை — அது அவர்களின் நம்பிக்கை. ஆனால் எனக்கு மேல ஒரு சக்தி இருக்கிறது, அதை நான் நம்புறேன்.

என் நம்பிக்கையை மதிக்க வேண்டும், அதேபோல் நான் அவர்களின் நம்பிக்கையையும் மதிக்கிறேன்” என தெளிவுபடுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் விவாதம் இன்னும் தீவிரமடைந்துள்ளது. பலர் “ரிஷப் செட்டியின் நம்பிக்கை தெய்வீக நம்பிக்கையாக இருக்கலாம், ஆனால் மூடநம்பிக்கைக்கு எதிராக பேசுவது சரி அல்ல” எனக் கூறி விவாதத்தை சமநிலைப்படுத்த முயற்சி செய்து வருகின்றனர்.