நாடு முழுவதும் 7 முதல் 15 வயதுடைய சிறார்களுக்கு ஆதார் புதுப்பிப்புக்கான கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஆதார் அமைப்பு அறிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள இந்த கட்டண தள்ளுபடி நடவடிக்கை, சுமார் 6 கோடி பேருக்கு பயனளிக்கும் வகையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள நடைமுறை ஒரு வருடம் அமலில் இருக்கும்’.

இந்த முடிவு சிறுவர்களின் அடையாள விவரங்களை புதுப்பிக்க பெரிய நிவாரணமாக இருக்கும் என்றும், குடும்பங்களுக்கு கூடுதல் செலவில்லாமல் சேவை வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.