கோவாவில் 2027ல் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், “காங்கிரஸுடன் எங்களால் எந்த கூட்டணியும் அமைக்க முடியாது” எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், “சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸுடன் இணைந்து போட்டியிடுவது என்பது எம்எல்ஏக்களை நேரடியாக பாஜகவிடம் ஒப்படைப்பதற்கே ஒப்பாகும்” எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவரது இந்தக் கூற்று எதிர்கட்சிகளிடையே உள்ள பகிர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் தற்போது பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
