கரூரில் மனிதனால் ஏற்பட்ட பேரிடரைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக்கழக தரப்பினர் தங்கள் தவறை ஒப்புக்கொள்ளாமல், அதன் பின்னணியில் ஆளுங்கட்சி சதி, கூட்டத்திற்குள் அந்நியர்கள் புகுந்து விட்டனர் போன்ற வாதங்களை முன்வைத்து அரசியல் செய்தனர். ஆனால், நீதிமன்றத்தில் அந்த தரப்பினர் மக்கள் முன்னிலையில் கூறிய எந்தவொரு கூற்றையும் வாதமாக முன்வைக்காமல், தங்களுக்கே சாதகமாக இருக்கும் பக்கம் மட்டுமே எடுத்துரைத்தது, கட்சிக்குள்ளேயே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “விஜய்க்கு ஆதரவாக பேசுகிறவர்கள் ஏன் ஆளுங்கட்சியே இதற்குப் பின்னால் இருக்கிறது என கூறத் தயங்குகிறார்கள்? பயமா?” என கட்சிக்குள்ளேயே சிலர் கேள்விகள் எழுப்ப, இது கட்சி ஆதரவாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, நீதிமன்ற நீதிபதி தமிழக வெற்றிக்கழக தரப்பு வாதங்களை நிராகரித்து, அவர்களது செயல்பாடுகள் தவறாக இருந்ததெனக் குற்றச்சாட்டுகளை முன்வைக்க, தவெக தரப்பினருக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. இதனால் சில கட்சி நிர்வாகிகள், திமுகவையும் எதிர்க்கட்சிகளையும் விமர்சிக்கும் போக்கு போலவே நீதிபதியையும் நேரடியாக விமர்சிக்க முனைந்துள்ளனர். இதை தடுக்க, “நீதிபதியை விமர்சித்தால் சட்ட ரீதியாக கடுமையான விளைவுகள் ஏற்படும்; அவசரப்பட வேண்டாம், பொறுமையாக இருங்கள்” என தமிழக வெற்றிக்கழக மதுரை ஐடி விங் வெளியிட்ட அறிவிப்பு தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது. கட்சி நிர்வாகிகளுக்கே தங்கள் தொண்டர்களை ஒழுங்குபடுத்த வேண்டிய சூழ்நிலை வந்துள்ளதோடு, இந்த விவகாரம் தமிழக வெற்றிக்கழகத்தின் அரசியல் பரிணாமத்தில் ஒரு turning point ஆக மாறும் நேரத்தில் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
நீதிபதியை யாரும் விமர்சிக்க வேண்டாம். தோழர்கள் சற்று பொறுமை காக்கவும்.
— TVK IT Wing – Madurai (South Constituency) (@TVKItwingmdu) October 3, 2025
