கரூரில் நிகழ்ந்த துயரச் சம்பவம், தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் கறுப்பு பக்கமாகவே நின்று வருகிறது. மக்கள் உயிரிழந்த அந்த கொடூர நிகழ்வின் போது, விஜய் மற்றும் அவரது கட்சி நிர்வாகிகள் யாரும் நேரில் நின்று பொறுப்புடன் செயல்படவில்லை என்பது பெரும் கண்டனத்தை ஏற்படுத்தியது. “விஜய்க்கு தலைமை பண்பு இல்லை” என உயர்நீதிமன்ற நீதிபதியால் வெளிப்படையாக கூறப்பட்டதைத் தொடர்ந்தே, தற்போது தமிழக வெற்றிக்கழகத்துக்குள்ளேயே கடும் ஆதங்கங்கள் எழுந்துள்ளன. தங்களின் ஒரே தவறு, “அந்த நாளில், அந்த ஒரு நொடியில், கரூரில் இருந்திருக்க வேண்டிய தலைவர் இல்லாமல் போனது” என சமூக வலைதளங்களில் பலர் தங்கள் வருத்தத்தையும் விமர்சனத்தையும் பதிவு செய்து வருகின்றனர்.

“அன்னைக்கு ஒரு செகன்ட் யோசிச்சுருந்தா… அன்னைக்கு மட்டும் கரூர்லயே இருந்துருந்தா… இப்போ ஆளும் அரசு தான். எல்லா அடியும் வாங்கிருக்கும். ஆனா ஒரு தவறு பண்ணிட்டோம். இப்போ அதுதான் நம்ம  பெரிய மைனஸ். அந்த விஷயத்தைப் புரிஞ்சுக்க வேண்டிய நேரம் இது” என உற்சாகமான தொண்டர்கள் கூட தங்களது ஏமாற்றத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.   இனியாவது கட்சி ஓருங்கிணைப்பு, தலைமைத் தீர்வு,  பொறுப்புடன் செயல்பட்டு கட்டமைப்பை உருவாக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி வருகின்றனர்.