கரூர் துயரச் சம்பவம் குறித்து விஜய் அவர்கள் சினிமா வசன பாணியில் பேசியதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்துவருகின்றன. “இது அவரது தொண்டர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் தவறான முன்னுதாரணமாக இருக்கும்” என்ற வாதமும் பரவலாக பேசப்படுகிறது. இதற்கே சான்றாக, சமீபத்தில் விஜயின் ஆதரவாளர் ஒருவர் தமிழக வெற்றிக்கழகத்தின் கட்சி துண்டைத் தலையில் கட்டிக்கொண்டு,  ஆதாரமற்ற மற்றும் சினிமா பாணியில் பேசி அதை வீடியோவாக பதிவு செய்து,  இணையத்தில் வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் தங்களது பக்கங்களில் கடுமையான கிண்டலுடன் பதிவிட்டுள்ளனர். “தமிழ்நாடு அரசு உடனடியாக ‘அணில் மனநல மறுவாழ்வு மையம்’ அமைக்க வேண்டும். தனிநபர் மானத்தை மட்டுமல்ல தமிழ்நாட்டு மானத்தையே வாங்கும் இந்த மனநோயை அழிப்பது அரசின் பொறுப்பு” எனக் குறிப்பிடும் வகையில் கருத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே வரும் முன் காப்போம், வருங்காலத்தை மீட்போம்” என்ற வாசகங்களுடன் அந்த வீடியோவை பகிர்ந்து, விஜய் பாணியால் அரசியல் எப்படி தவறாக பின்பற்றப்படுகிறது என்பதை நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர்.