பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பயணிகள் சென்ற விமானம் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டதால், மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையிலிருந்து மதுரை நோக்கி வந்த இந்த பயணிகள் விமானம், தரையிறங்க வேண்டிய கடைசி நிமிடத்தில் திடீரென மீண்டும் மேலே பறக்கத் தொடங்கியது. இந்த திடீர் மாற்றம் பயணிகளில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

விமானம் தரையிறங்காததற்கான காரணம், அதிகப்படியான வெப்ப அலை காரணமாக ரன் வே மீது நிலவும் சூழ்நிலை பாதுகாப்புக்கேற்ப இல்லாததாக கூறப்பட்டது. சம்பவம் நடைபெற்று 13 நிமிடங்கள் கழித்து விமானம் மீண்டும் பத்திரமாக தரையிறக்கப்பட்டதை அடுத்து பயணிகள் நிம்மதியடைந்தனர்.