இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி, பார்ப்பவர்களை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோவில், ஒரு யானை நடந்து செல்கிறது. அப்போது, அதன் பாதையில் ஒரு ஆடு தவறுதலாக வந்து நிற்கிறது. யானையை கவனிக்காமல் ஆடு அங்கேயே நிற்க, யானை அந்த ஆட்டை மிதித்துவிட்டு செல்கிறது. இதனால், ஆடு வலியால் துடிப்பது காணொளியில் பதிவாகியுள்ளது. இந்தக் காட்சி பார்ப்பவர்களின் மனதை உலுக்கி, பலரையும் உணர்ச்சிவசப்பட வைத்துள்ளது.
குறிப்பாக வீடியோவை பதிவு செய்த நபர் கூட ஆட்டை அங்கிருந்து விரட்டிவிட முயற்சிக்கவில்லை என்பது தான் வருத்தத்திற்குரியது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், ஆட்டின் பரிதாபமான நிலையை நினைத்து வருத்தத்துடன் கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர். இந்த காணொளி தற்போது வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
