தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகும் ஒரு புகைப்படம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹிமாச்சல பிரதேச மாநிலம், சிர்மோர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை தான் இது. ₹7,616 ரூபாய்க்கு காசோலை எழுதப்பட்டிருந்தது. ஆனால் அதில் எழுதப்பட்ட ஆங்கில வரிகள் பார்ப்பவர்களை மிரள வைக்கிறது.

 

காசோலையில் “Seven Thousand Six Hundred and Sixteen” என்பதற்கு பதிலாக, “Seven Thursday Hundred and…” என்ற வகையில் மிகவும் தவறான எழுத்துகளில் குறிப்பிட்டிருந்தது. மேலும் ‘Six’ மற்றும் ‘Sixteen’ என்பவற்றின் எழுத்துப் பிழைகளும் தெளிவாகக் காணப்பட்டன.

மாணவர்களுக்கு வழிகாட்டும் இடத்தில் இருக்கும் ஒரு முதல்வரிடமிருந்து இவ்வாறு அடிப்படை ஆங்கில வார்த்தைகளும் சரியாக எழுதப்படாதது, பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. முக்கியமாக, அந்த காசோலையில் பள்ளியின் முத்திரையும், முதல்வரின் கையொப்பமும் தெளிவாக காணப்பட்டது என்பதும் கவலைக்குரிய விஷயமாகும்.

இந்த புகைப்படத்தை முதலில் @rana_indrjeet என்ற X பயனர் பகிர்ந்ததிலிருந்து அது வேகமாக வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலர் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளனர். ஒருவர், “இவருக்கு 18% மதிப்பெண்கள் வந்தாலுமே இந்த வேலை கிடைத்திருக்கும் போல” என எழுதியிருந்தார்.

மற்றொருவர், “இது கல்வி தகுதியால் கிடைத்த பதவியா, அல்லது ஒதுக்கீட்டினால் வந்ததா?” எனக் கேள்வி எழுப்பினார். இந்த சம்பவம், கல்வி முறையின் தரம் குறித்த பெரும் சந்தேகங்களை கிளப்புவதுடன், இதுபோன்ற தலைவர்களின் கீழ் மாணவர்களின் எதிர்காலம் எப்படி பாதுகாப்பாக இருக்கும் என்ற கேள்வியையும் எழுப்புகிறது.