2025 ஏசியா கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வென்று கோப்பையைத் தக்கவைத்தது. இந்த வெற்றிக்குப் பிறகு, இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் டுபாயில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசினார். அப்போது, ஒரு பாகிஸ்தான் பத்திரிகையாளர் அவரை விமர்சித்து, நீங்கள் கைகுலுக்கவில்லை, கோப்பைக்காக புகைப்படம் எடுக்கவில்லை.
பின்னர் நீங்கள் ஒரு அரசியல் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினீர்கள். கிரிக்கெட் வரலாற்றில் கிரிக்கெட் விளையாட்டில் அரசியலைக் கொண்டு வந்த முதல் கேப்டன் நீங்கள் என்று நினைக்கிறீர்களா? இந்தக் கேள்விகள் பாகிஸ்தானின் தோல்வி காரணமாக எழுந்த கோபத்தைப் பிரதிபலித்தன.
Pakistani reporter crying in press conference. This is what we wanted 🤣🤣👇#AsiaCupFinal pic.twitter.com/J7VQXv7U6n
— Amit Kumar Sindhi (@AMIT_GUJJU) September 28, 2025
சூர்யகுமார் இதற்கு வேடிக்கையாக, பதில் சொல்ல வேண்டுமா இல்லையா?” என்று கேட்டு, “நீங்கள் கோபமாக இருக்கிறீர்களா?” என்று சிரித்தார். மேலும், ஒரே நேரத்தில் நான்கு கேள்விகள் கேட்டதால் புரியவில்லை என்று கூறி, அந்த பத்திரிகையாளரை இலகுவாக அமைதிப்படுத்தினார். இந்தப் பதில் அங்கிருந்த மற்றவர்களை சிரிக்க வைத்தது. இந்தக் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி, சூர்யகுமாரின் நகைச்சுவை உணர்வு பாராட்டப்பட்டு, பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
