இந்தியாவின் பல பகுதிகளில் தற்போது மக்கள் உடல் நலத்திற்கும், ஃபிட்னஸுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். இதனால் ஜிம்முகள் மிகுந்த கூட்டத்தை சந்தித்து வருகின்றன. குறிப்பாக பீக் அவர்களில் ஒவ்வொரு எக்ஸர்சைஸ் மெஷினையும் பயன்படுத்த ஒரு சிறிய வரிசையில் நின்று வருவது வழக்கம்.

 

ஆனால், சில நேரங்களில் இந்தத் தாமதங்களால் சிறிய வாக்குவாதங்கள் பெரும் மோதலாக மாறும் நிலையும் உருவாகிறது. அதேபோல, சமீபத்தில் இணையத்தில் வைரலாக பரவும் ஒரு வீடியோவில், இரண்டு பெண்கள் ஜிம் மெஷின் ஒன்றுக்காக நேரில் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பெண் மெஷினில் எக்ஸர்சைஸ் செய்து கொண்டிருந்த போது, இன்னொரு பெண் தனது வரிசை வந்துவிட்டதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது சின்னதாகத் தொடங்கி, கடும் வாய் தகராறாக மாறியது. ஒரே நேரத்தில் இருவரும் ஒருவரின் தலைமுடியை இழுத்து, சண்டையில் இறங்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது.

இந்த சண்டை சுமார் இரண்டு நிமிடங்கள் நீடித்து, அந்த ஜிம் சில நேரத்திற்கு ரெஸ்லிங் அரங்கமாக மாறிவிட்டது. பின்னர் அங்கு இருந்த மற்ற பெண்கள் சமாதானப்படுத்தி இருவரையும் பிரித்தனர். இந்த சம்பவம் அந்த ஜிம்மின் சிசிடிவி கேமராக்களில் பதிவாகி, பிறகு யாரோ ஒருவர் அதை இணையத்தில் பகிர்ந்ததால் வீடியோ வைரலானது. தற்போது இது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி, பலரும் அதனை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.