கரூரில் தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் நடந்த நெரிசல் சம்பவம் நடிகரும் தலைவருமான விஜயை மிகவும் மனமுடைந்து போகச் செய்துள்ளது. இந்த துயர சம்பவத்தால் அவர் தனது அலுவலகத்தில் தனியாக இருக்கிறார். ரசிகர்கள் கூறுகையில், விஜய் சனிக்கிழமை மதிய உணவுக்குப் பிறகு ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்கவில்லை என்று கவலை தெரிவிக்கின்றனர்.

“அண்ணன் யாரிடமும் பேசவில்லை, தனியாகவே இருக்கிறார்” என்று ரசிகர்கள் உருக்கமாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு, அவரது உடல்நிலை குறித்து கவலையை வெளிப்படுத்துகின்றனர். கரூர் சம்பவத்தால் விஜய் மிகுந்த குற்ற உணர்வில் உள்ளார். “நம்முடைய கூட்டத்தில் இப்படி ஒரு சோகம் நடந்துவிட்டதே” என்று மனமுடைந்து, எப்படி மீண்டும் மக்களை சந்திப்பது என்று வேதனையில் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த வழக்கில் அவர் கைது செய்யப்படலாம் என்ற தகவல்களும் அவரை மேலும் பாதித்துள்ளன. TVK தொண்டர்கள், விஜய் விரைவில் இந்த வலியில் இருந்து மீண்டு வருவார் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர். ரசிகர்கள், அவருக்கு ஆதரவாக நின்ற அனைவருக்கும் நன்றி கூறியுள்ளனர்.