கரூர் மாவட்டத்தில் கடந்த 27ம் தேதி தவெக தலைவர் விஜய் நடத்திய பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தமிழகமெங்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்திற்கெதிராக, பொதுமக்கள் உணர்வை பிரதிபலிக்கும் வகையில் இன்று (செப்.29) தமிழகமெங்கும் முழுமையான கடையடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. வணிகர்களின் பல சங்கங்கள், அமைப்புகள் இந்த போராட்டத்தில் பங்கேற்கின்றன.

அதன்படி, இன்று மாநிலம் முழுவதும் மளிகை கடைகள், ஜவுளி மற்றும் ரெடிமேட் கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள், எலக்ட்ரானிக்ஸ் கடைகள், உணவகங்கள் அனைத்தும் இயங்காது. குறிப்பாக கரூர் மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.