கரூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 40 பொதுமக்கள் உயிரிழந்ததையடுத்து, இந்நிகழ்வை தொடர்ந்து தமிழகத்தில் அரசியல் பரபரப்பு உருவாகியுள்ளது.
இந்நிலையில், விஜய்யை கைது செய்யக்கோரி ‘தமிழ்நாடு மாணவர் சங்கம்’ என்ற பெயரில் சேலம் உள்பட பல பகுதிகளில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, திமுகவின் “தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்” என்ற போஸ்டருக்குப் பக்கமாகவே, “விஜய் அரசியல் தற்குறி, 39 அப்பாவி உயிர்களுக்கு கொலைக்குற்றவாளி” என கடுமையாக குற்றம் சாட்டும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
இந்த போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருவதால், விவகாரம் அரசியல் பரிமாணம் பெற்று வருகிறது. இதைக் கண்ட சில நெட்டிசன்கள், “இது முழுமையாக விஜய்க்கெதிரான திட்டமிடப்பட்ட அரசியல் நடவடிக்கையாக இருக்கலாம்” எனக் கூறுகின்றனர். மேலும், விஜயை கைது செய்ய வேண்டும் என்ற கோஷங்களும் சில பிரிவுகளிடையே ஒலிக்கத் தொடங்கியுள்ளன. இதனால், கரூர் சம்பவம் முற்றிலும் புதிய அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
