அமெரிக்காவுக்கு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது அதிக வரி விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
இந்த முடிவால், சர்வதேச வர்த்தகச் சந்தையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, வாகன உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட பல துறைகளில் இயங்கும் நிறுவனங்கள் புதிய வரிவிதிப்பு காரணமாக கூடுதல் செலவுகளை எதிர்கொண்டு வருகின்றன.
இதன் விளைவாக, உலகின் முன்னணி வாகன உதிரிப்பாகங்கள் தயாரிப்பு நிறுவனமான Bosch, செயல்திறனை மேம்படுத்தும் நோக்கத்தில் சுமார் 13,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. வரிவிதிப்பால் ஏற்பட்ட செலவுகளை கட்டுப்படுத்துவதே இந்நடவடிக்கையின் நோக்கமாகக் கூறப்படுகிறது. டிரம்ப் இந்த நடவடிக்கையால் வேலைவாய்ப்புகள் குறையும் நிலை உருவாகுமா என்றும் தற்போது தொழில்துறை வட்டாரங்களில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
