சமையலறை குழாயில் தண்ணீர் பயன்படுத்தும்போது பெரும்பாலும் பிரச்னைகள் ஏற்படுகின்றன. பாத்திரங்களைக் கழுவும்போது அதிக தண்ணீர் வீணாகிறது, மேலும் தண்ணீர் வேகமாக வருவதால் கட்டுப்படுத்துவது கடினம். மெதுவாக குழாயைத் திறந்தால், பாத்திரங்கள் நன்றாகக் கழுவ முடியாது. இதற்கு தீர்வாக, சிலர் குழாயில் நாசில் பொருத்துகிறார்கள், இதனால் தண்ணீர் தேவைக்கு ஏற்ப வரும். ஆனால், சந்தையில் கிடைக்கும் நாசில்கள், குறிப்பாக ஸ்பிரிங் வகை நாசில்கள், விலை அதிகமாக இருப்பதால் அனைவரும் வாங்க முடிவதில்லை.
இந்த பிரச்னைக்கு ஒரு எளிய தீர்வாக, சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இதில் ஒரு பெண், வீட்டிலேயே குறைந்த செலவில் நாசில் தயாரிக்கும் எளிய முறையை விளக்குகிறார். முதலில், அவர் ஒரு ஆணியை நெருப்பில் சூடாக்கி, ஒரு பிளாஸ்டிக் பாட்டில் மூடியில் சிறு துளைகளை உருவாக்குகிறார். பின்னர், அந்த மூடியை உல்டாவாக வைத்து, அதில் ஒரு பலூனைப் பொருத்துகிறார். பலூனை நடுவில் வெட்டி, மூடியுடன் சேர்த்து குழாயில் பொருத்தி, ரப்பர் பேண்ட் கொண்டு இறுக்கமாக கட்டுகிறார். இதனால், பலூன் நழுவாமல் இருக்கிறது.
இந்த எளிய முறையால், குழாயைத் திறக்கும்போது தண்ணீர் சீரான அழுத்தத்துடன், வடிகட்டப்பட்டு வருவதை வீடியோவில் காட்டுகிறார். இந்த நாசிலைப் பயன்படுத்தி, சிங்கை எளிதாக சுத்தம் செய்ய முடியும். இந்த வீடியோவை @artivashishtha91 என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் பகிர்ந்துள்ளது, இது 1.6 கோடிக்கும் மேல் பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது. பயனர்கள் இதைப் பாராட்டி, “அற்புதமான யோசனை”, என்று கருத்துகள் தெரிவித்துள்ளனர். ஒருவர் வேடிக்கையாக, “இந்தியப் பெண்களுக்கு எல்லா பிரச்னைக்கும் ஒரு தீர்வு இருக்கிறது” என்று கூறினார்.
