ரஷ்யாவின் பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கி நகரில் நிகழ்ந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில், பெரிய கருப்பு கரடி ஒன்று பார்க்கிங் லாட்டில் திடீரென தோன்றி அங்கிருந்த மக்களை தாக்கியது. இந்த கொடூர தாக்குதலில், 84 வயது முதிய பெண் ஒருவர் பலத்த காயங்களால் உயிரிழந்தார்.
அதேசமயம், 12 வயது சிறுவன் ஒருவன் சாதுர்யமாக தப்பித்தார், அவன் இறந்தது போல் நடித்ததால் உயிர் பிழைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்றொரு ஓட்டுநர் தனது காரை வேகமாக ஓட்டி அந்த இடத்தை விட்டு தப்பினார். இந்த முழு சம்பவமும் பார்க்கிங் லாட்டின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
A dangerous bear went on a rampage in Russia’s Petropavlovsk-Kamchatsky. It attacked a 12-year-old boy (who survived by playing dead), a man in a parking lot (who escaped into his car), and an 84-year-old woman, who died from her injuries. The bear was shot near a local school. pic.twitter.com/Jbh4ZIZrWG
— Brian McDonald (@27khv) September 25, 2025
வீடியோவில், கரடி திடீரென தோன்றி சிறுவனை தாக்க முயல்வது தெளிவாக தெரிகிறது, ஆனால் சிறுவன் விரைவாக காருக்குள் சென்று கதவுகளை மூடிக்கொண்டார். பின்னர் கரடி வேறு இரையை தேடியது, ஆனால் அருகிலிருந்த கார் ஓட்டுநர் வாகனத்தை இயக்கி தப்பித்தார்.
இந்த வீடியோவை @27khv என்ற பயனர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். “ரஷ்யாவின் பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கியில் ஆபத்தான கரடி ஒன்று வெறியாட்டம் ஆடியது. அது 12 வயது சிறுவனை (இறந்தது போல் நடித்து உயிர் பிழைத்தான்), பார்க்கிங் லாட்டில் இருந்த ஆண் ஒருவரை (காருக்குள் தப்பினார்), மற்றும் 84 வயது பெண்ணை தாக்கியது, அவர் காயங்களால் இறந்தார். கரடி உள்ளூர் பள்ளி அருகே சுட்டுக்கொல்லப்பட்டது” என்று கேப்ஷனில் குறிப்பிடப்பட்டுள்ளது.
