கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் சட்டிகுனி அருகே உள்ள துகனூர் ஹட்டி கிராமத்தில் கலங்கவைக்கும் கொடூர சம்பவம் ஒன்று நேற்று முன்தினம் நடந்தது. கூலி தொழிலாளியான சரணப்பா என்பவர், தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு, பலமுறை தகராறு செய்து வந்த நிலையில், அந்த கோபத்தின் உச்சத்தில் மூன்று குழந்தைகளையும் வெட்டியதுடன், இருவரை கொலை செய்த சம்பவம் நெஞ்சை உலுக்கி உள்ளது.

சரணப்பா, தனது மனைவியை கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு சித்ரவதையால் பிரிந்திருந்தார். மனைவி குழந்தைகளை அழைத்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்றிருந்த நிலையில், பத்து நாட்களுக்கு முன்பு அவரை சமாதானம் செய்து மீண்டும் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார். ஆனால், மீண்டும் பழைய சந்தேகத்தின் காரணமாக இருவருக்கிடையே வாக்குவாதம் இடம்பெற்றது. “இந்தக் குழந்தைகள் எனது பிள்ளைகள் அல்ல” என மனைவியை தொடர்ந்து குற்றம் சுமத்தி வந்தார்.

தகாருக்குப் பிறகு, இரவு வீட்டில் அனைவரும்  தூங்கினர். அதன் பின் மாலையில் சரணப்பா மனைவி காலைக்கடன் கழிப்பதற்காக சென்றிருந்தார். அப்போது கோபத்தில் திடீரென பொங்கி எழுந்த சரணப்பா, வீட்டில் இருந்த கோடரியை எடுத்து, தூங்கிக் கொண்டிருந்த தனது மூன்று குழந்தைகளையும் கொடூரமாக வெட்டினார். சான்வி (5) மற்றும் பார்கவ் (3) சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

ஹேமந்த் (3) பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு, உயிருக்கு போராடி வருகிறார். இந்த சம்பவம் குறித்து யாதகிரி புறநகர் போலீசார் வழக்குப் பதிந்து, தப்பி ஓடிய சரணப்பாவை வலைவீசி தேடி வருகின்றனர். கிராமத்தில் பதற்றமான நிலை நிலவுகிறது.