நதிக்கரையில் ஒரு கும்பல் சிங்கங்கள் சேர்ந்து ஒரு நீர் யானையை தாக்கும் அதிர்ச்சி சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. கோபத்தில் பாய்ந்த சிங்கங்கள், நீர் யானையின் முதுகில் மற்றும் உடலில் கொடூரமாக தாக்குகின்றது. உயிர் காக்க போராடும் அந்த நீர்யானை தன்னை காப்பாற்ற முடியாமல் தடுமாறும் நிலையில் இருக்க, அங்கு திடீரென வேறொரு பெரிய நீர்யானை வந்து தாக்கிய காட்சி ஆச்சர்யமளிக்கிறது.

 

இந்த அதிரடி தாக்குதலால் பயந்த சிங்கங்கள், தங்கள் வேட்டையை விட்டு விட்டு ஓடிச் செல்வதை வீடியோவில் தெளிவாக காணலாம். 13 விநாடிகள் கொண்ட இந்த வீடியோவை @TheeDarkCircle என்ற பக்கத்தில் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இதுவரை 4.2 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

“இது தான் காட்டுக்குள் நடக்கும் உண்மை நீதிமன்றம்!” என நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்க, சிலர் நீர்யானையின் சக்தியை பார்த்து “அதான் சொல்றோம்… நீர்யானையை பத்திரமா வச்சிக்கோ” என்று கிண்டல் செய்து இருக்காங்க. மேலும், “இனிமே சிங்கங்கள் எதிரியை தேர்ந்தெடுக்கும் போது பத்து முறை யோசிக்கும்!” என்றும் சாடையில் கருத்துகள் குவிந்துள்ளன.