லாவோஸ் நாட்டின் ஒதுக்குப்புறமான கிராமப் பள்ளிக்கு வந்த ஒரு வெளிநாட்டுபயணி, அங்கிருந்த குழந்தைகளை அறியாமல் பயமுறுத்தி, அவர்கள் அழுது ஒளிஞ்ச காட்சி இணையத்தில் வைரலாகி சிரிப்பலையை கிளப்பியுள்ளது.
அந்த வெள்ளைப் பெண்ணைப் பார்த்ததும், குழந்தைகள் பயந்து, நாற்காலி, கரும்பலகை, புத்தகங்களுக்கு பின்னால் ஒளிஞ்சு, சிலர் கண்ணீர் விட்டு ஓடினாங்க. சில குழந்தைகள் மறைஞ்சாலும், ஆர்வத்தோடு மூலையில் இருந்து எட்டிப் பார்த்து, சிரிக்கவா பயப்படவானு குழம்பி நின்னாங்க.
முதலில் இந்த பயணி, குழந்தைகளோட இந்த பதறலுக்கு காரணம் புரியாம திகைச்சு, பிறகு தன்னோட வெள்ளைத் தோல்தான் காரணம்னு உணர்ந்து, சிரிச்சுக்கிட்டே இந்த கலகல காட்சியை வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் பதிவேறிய சில மணி நேரங்களில் தீயாகப் பரவி, எல்லோரையும் சிரிக்க வைத்துள்ளது.
இந்த கிராமத்துக்கு சுற்றுலாப் பயணிகள் அரிதாகவே வருவதால், குழந்தைகளுக்கு வெளிநாட்டவர்கள், குறிப்பா வெள்ளைத் தோல் உள்ளவங்க புதுசா இருந்திருக்கலாம்னு உள்ளூர் மக்கள் சொல்கிறார்கள். சில கலாசாரங்களில், வெள்ளைத் தோல் பேய்களோடு தொடர்பு படுத்தப்படுது, அதனால குழந்தைகள் இவங்களை பேய்னு நினைச்சு பயந்திருக்கலாம்னு சிலர் சொல்கிறாரகள்.
View this post on Instagram
இணையத்தில் இந்த வீடியோ பரவியதும், “குழந்தைகள் இவங்களை புது பாடம்னு நினைச்சுட்டாங்க போல”னு ஒருத்தர் கிண்டலடிச்சார். “இங்கிலீஷ் வகுப்பு இல்ல, இது பயம் பாடம் 101”னு இன்னொருத்தர் சிரிச்சார். “முதல் முறையா சுற்றுலாப் பயணியை பார்க்கும்போது, பேயைப் பார்த்த மாதிரி ஆயிடுச்சு”னு மற்றொரு கமெண்ட் வந்தது. இந்த அப்பாவி பயணியும், குழந்தைகளோட அழகான பயமும், இணையவாசிகளை கலகலப்பாக்கி, சிரிப்பு அலையை உருவாக்கியுள்ளது.
