சமூக வலைத்தளத்தில் தற்போது, ஒரு வித்தியாசமான பந்தய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, அனைவரையும் சிரிக்க வைத்து வருகிறது. இந்த வீடியோவில், பெண்கள் தங்கள் கணவன்மாரை தூக்கி ஓடும் ஒரு அசாதாரண பந்தயம் இடம்பெற்றுள்ளது. இந்த வைரல் வீடியோவில், ஒரு பக்கம் பெண்கள் வரிசையாக நின்று, பந்தயத்தை தொடங்குகின்றனர். மறுமுனையில் அவர்களின் கணவன்மார் நிற்கின்றனர். பெண்கள் ஓடிச்சென்று, தங்கள் கணவன்மாரை கையில் தூக்கி, மீண்டும் பந்தயத்தின் தொடக்கப் புள்ளிக்கு ஓடி வருகின்றனர். இதுபோன்ற வித்தியாசமான பந்தயம் வழக்கமாக காண முடியாது என்பதால், இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வேடிக்கையான காட்சி பார்ப்பவர்களை சிரிக்கவும், ஆச்சரியப்படுத்தவும் செய்கிறது. இதுபோன்ற புதுமையான பந்தயங்கள் மக்களுக்கு புது விதமான பொழுதுபோக்காக அமைந்துள்ளது.
The prince treatment we boys want from our Pasandida girl pic.twitter.com/1VDvzYbIS0
— Vishal (@VishalMalvi_) September 25, 2025
இந்த வீடியோ எக்ஸ் தளத்தில் @VishalMalvi_ என்ற கணக்கில் பதிவிடப்பட்டுள்ளது. வீடியோவுடன், “நாங்கள் ஆண்கள், எங்களுக்கு பிடித்த பெண்ணிடமிருந்து இதுபோன்ற இளவரசர் நடத்தையைத்தான் எதிர்பார்க்கிறோம்” என்று கேப்ஷனில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பலர் பார்த்து ரசித்துள்ளனர். ஒரு பயனர், “இதற்கு நீ சைஸ் ஜீரோவாக வேண்டும்” என்று கமெண்ட் செய்தார். மற்றொருவர், “எடையை குறைக்க வேண்டும்” என்று எழுதினார். இந்த வீடியோவுக்கு பலரும் சிரிப்பு மற்றும் ஆச்சரிய ரியாக்ஷன்களை அளித்து, அதை மேலும் பரவவைத்து வருகின்றனர்.
