தமிழ்நாடு அரசு, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 881 புதிய கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம், கல்லூரிகளில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையை குறைக்கவும், மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதில் ஆர்வம் உள்ளவர்கள் tngasa.org என்ற இணையதளம் மூலமாக அக்டோபர் 10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் முன்பு விண்ணப்பித்தவர்கள் தற்போது விண்ணப்பிக்கும் போது விண்ணப்ப எண்களை பதிவு செய்து கட்டண விளக்கு பெறலாம் கல்வி தகுதி மற்றும் நேர்முக தேர்வு மதிப்பீடுகளின் அடிப்படையில் தேர்வு நடைபெறும் என்று அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளார்.