சென்னையில் தொடர்ந்து ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து அதிர்ச்சியை கொடுத்த நிலையில் இன்று விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 320 ரூபாய் குறைந்து, 84,800 ரூபாய்க்கும், ஒரு கிராம் 10,600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் வெள்ளி விலை இன்று ஒரு கிராம் 150 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 150000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
