கரூர் மாவட்டத்தில் நடைபெறும் பிரச்சார நிகழ்வுகளுக்காக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் தமிழக வெற்றி கழகம் கட்சி தலைவர் விஜய் இருவரும் செப்டம்பர் 27ஆம் தேதி காவல்துறையிடம் அனுமதி கோரியிருந்தனர்.
இந்த தேதியில் முதலில் அனுமதி பெற்றவர் அன்புமணி ராமதாஸ் என்பதனால், விஜய்க்கு அதே தேதியில் அனுமதி பெற சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் வேண்டுகோளை ஏற்று, அன்புமணி தனது நடைபயணம் மற்றும் பிரச்சாரத்தினை செப்டம்பர் 28ஆம் தேதிக்கு மாற்றியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த முடிவை அரசியல் வட்டாரங்களில், அன்புமணி விஜய்க்கு விட்டுக்கொடுத்தார் எனும் வகையில் பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே, பாமகவும் தவெக கட்சியும் இடையே நெருக்கம் உருவாகும் சூழல் காணப்படுகிறது.
அதனை உறுதிப்படுத்தும் விதமாக, இந்நிகழ்வு ஒருவகையில் இணைதலுக்கான நுட்பமான சமிக்ஞை என்றும், எதிர்காலத்தில் இரண்டு கட்சிகளும் கூட்டணிக்குள் சேரும் வாய்ப்பு இருக்கலாம் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
