அன்பும் விசுவாசமும் சில நேரங்களில் நான்கு கால்களில் வருகின்றன” – இந்த வாசகத்தை உணர்த்தும் வகையில், பெங்களூரு நகரின் வீதிகளில் 28 கோல்டன் ரெட்ரீவர்களுடன் அமைதியாக நடந்து செல்லும் ஒரு பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அருகில் இருந்தோர் பதிவு செய்த இந்த வீடியோ தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. @xploreraa என்ற பயனர் இந்த காணொளியைப் பகிர்ந்துள்ளார். அதில், “பெங்களூருவின் ஆர்.டி. நகரில் ஒரு பெண் 28 கோல்டன் ரெட்ரீவர்களுடன் நடந்து செல்வதைப் பார்த்தோம். அனைத்தும் மகிழ்ச்சியாக, அமைதியாக இருக்கின்றன” எனக் கூறியுள்ளார்.
வீடியோவில் அந்த பெண், சில நாய்களை கையில் வைத்திருந்தாலும், பெரும்பாலான நாய்கள் சுதந்திரமாக வழியில் நடந்து செல்லும் காட்சிகள் காணப்படுகின்றன. அந்த நாய்கள் அனைவரும் அமைதியாகவும் கட்டுப்பாடுடன் நடந்து செல்லும் விதம், ஆச்சரியப்பட வைக்கிறது.
இந்த நாய் உறவின் உரிமையாளராக உள்ளவர், பெங்களூருவின் ஆர்.டி. நகர் பகுதியைச் சேர்ந்த சங்கீதா மல்ஹோத்ரா என உள்ளூர்வாசிகள் சமூக ஊடகங்கள் மூலம் அடையாளம் கண்டுள்ளனர். இது பற்றி சமூக வலைதளங்களில் ஒருவர் கூறியதாவது:
“ரெட் நகர் பகுதியைச் சேர்ந்த திருமதி சங்கீதா மல்ஹோத்ரா, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு விபத்தில் தனது குடும்பத்தினரை இழந்தார். அந்த வருத்தம் அவரை ஆழமாகவே பாதித்தது. அதன்பின்னர் அவர் யாரிடமும் பேச்சு வைத்துக் கொள்ளாமல் அமைதியாக வாழத் தொடங்கினார். இன்று, அந்த அமைதியின் நடுவே, தனது நாய்கள் மத்தியில் மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்.”
மேலும், அவர் தனது செல்ல நாய்களை சைகை மொழி மற்றும் கைத்தட்டல் மூலம் கட்டுப்படுத்துவதாகவும், அதற்கென தனி பிணைப்பு அவர்களுக்குள் உருவாகி இருப்பதாகவும் நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.
View this post on Instagram
