மகாராஷ்டிராவின் உல்ஹாஸ்நகரில் அமைந்துள்ள ஒரு தனியார் மழலையர் பள்ளியில், 2 வயது குழந்தை மீது பெண் ஆசிரியர் ஒருவரால் நடத்திய வன்முறை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலான நிலையில், மகாராஷ்டிரா நவநிர்மாண சேனா (எம்.என்.எஸ்.) நிர்வாகிகள் திங்கள்கிழமை பள்ளியில் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோவில், ஒரு பெண் ஆசிரியர் பாடம் சொல்லிக்கொடுக்கும் போது, குழந்தையை கைதட்டக் கூறுவதை காணலாம். குழந்தை கைதட்டத் தவறியதற்காக, அந்த ஆசிரியை திடீரென குழந்தையின் காதில் அறைந்ததாகக் காணப்படுகிறது. அறைந்ததையடுத்து குழந்தை அச்சத்தில் அழும் காட்சியும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோ கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் பரவிய நிலையில், பெற்றோர்களிடையே மற்றும் பொதுமக்களிடையே ஆவேசம் அதிகரித்தது. குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த கேள்விகள் எழுந்த நிலையில், எம்.என்.எஸ். கட்சி உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று, பள்ளி நிர்வாகத்திடம் நியாயம் கேட்டு தகராறு கேட்டனர்.
அவர்களுக்கு திருப்திகரமான பதில்கள் வழங்கப்படவில்லை எனக் கூறி, எம்.என்.எஸ். நிர்வாகிகள் கோபமடைந்து, பள்ளியின் பெயர் பலகை உள்ளிட்ட சொத்துக்களை சேதப்படுத்தினர். இது தொடர்பான காட்சிகள் வீடியோவாக சமூக ஊடகங்களில் வெளியாகி வருகிறது.
இந்தச் சம்பவத்தையடுத்து, பள்ளிகளில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, சில முக்கிய கோரிக்கைகளை எம்.என்.எஸ். முன்வைத்துள்ளது. அதில்,
ஆசிரியர்களை நியமிக்கும் முன் அவர்களின் மனநிலை மற்றும் போலீஸ் சரிபார்ப்பு கட்டாயமாக இருக்க வேண்டும். பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் கட்டாயமாக நிறுவப்பட வேண்டும். பெற்றோர்கள் சிசிடிவி பதிவுகளைப் பார்வையிட அனுமதிக்கப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட ஆசிரியர் மற்றும் நிர்வாகத்தினர்மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சம்பந்தப்பட்ட ஆசிரியர் தற்காலிக அடிப்படையில் பணியமர்த்தப்பட்டவர் என்றும், சம்பவம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நடை பெற்றதாகவும், தற்போது அந்த ஆசிரியர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், பள்ளி இயக்குநர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
ಉಲ್ಹಾಸ್ನಗರದಲ್ಲಿ ಪ್ಲೇಗ್ರೂಪ್ ಮಗುವಿಗೆ ಶಿಕ್ಷಕಿಯಿಂದ ಕಪಾಳಮೋಕ್ಷ; ಕವಿತೆಗೆ ಚಪ್ಪಾಳೆ ತಟ್ಟಿಲ್ಲವೆಂದು ಕೋಪ! ಪೋಷಕರ ಆಕ್ರೋಶ! ಶಿಕ್ಷಕಿ ವಿರುದ್ಧ ಪ್ರಕರಣ ದಾಖಲು.#ViralVideo #Maharashtra #playgroup #playschool #teacher #newskarnataka pic.twitter.com/KQsR5vKqt2
— News Karnataka (@Newskarnataka) September 21, 2025
