ஆசியக் கோப்பை 2025 தொடரின் சூப்பர் 4 சுற்றில், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, தங்களின் அபாரமான ஆட்டத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

இந்தியா இதுவரை தொடரில் ஒரு போட்டியிலும் தோல்வியடையாமல் சிறப்பாக விளையாடி வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான இது இரண்டாவது வெற்றியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றிக்குப் பிறகு, முன்னாள் இந்திய ஆல்ரவுண்டர் இர்ஃபான் பதான் தனது ட்விட்டர் பக்கத்தில் “ஆம், உங்கள் ஞாயிற்றுக்கிழமை எப்படி இருந்தது?” என்ற பதிவை பகிர்ந்தார். இந்த ட்வீட், பாகிஸ்தான் அணியின் தோல்வியை நையாண்டியாக குறிப்பிடும் வகையில் இருந்தது. ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த ட்ரோல், சமூக ஊடகங்களில் வைரலானது.

“>

 

டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக ஹாட்ரிக் பெற்றுள்ள இர்ஃபான் பதான், பாக் அணிக்கு என்றென்றும் நினைவில் இருக்கும் வீரராக திகழ்கிறார்.