ஆசியக் கோப்பை 2025 தொடரில் நடைபெற்ற சூப்பர் ஃபோர் சுற்றின் முக்கியமான ஆட்டமான இந்தியா-பாகிஸ்தான் மோதல், மீண்டும் ஒருமுறை ரசிகர்களிடையே பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆட்டத்தில் இந்தியா ஆட்டத்தை முழுமையாகக் கட்டுப்படுத்தி வெற்றியைப் பெற்றது. பாகிஸ்தானுக்கு எதிரான 172 ரன்கள் இலக்கை நோக்கி இந்தியா துவங்கியதில், சுப்மன் கில் (47 ரன்கள்) மற்றும் அபிஷேக் சர்மா (74 ரன்கள்)சிறப்பான தொடக்கத்தை உறுதிப்படுத்தினர். இறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்த ஆட்டம் பாகிஸ்தானில் பெரும் எதிர்வினையை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் தொலைக்காட்சி சேனலில் இடம்பெற்ற விவாத நிகழ்ச்சி ஒன்றில், தொகுப்பாளரின் கேள்வியும், அதற்குக் கொடுக்கப்பட்ட பதிலும் சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டுள்ளன.
Shameless Pakistanis on live TV
Losing the match so badly that they openly talk about sending boys to fire bullets and stop the game.This is the real mentality of Pakistan — terror even in cricket!
RT and show the world Pakistan’s reality.#INDvPAK #indvspak2025 #asiacup pic.twitter.com/SokEYXUW2P— Saffron_Syndicate (@SaffronSyndcate) September 21, 2025
அதில், “சர், எங்கள் வீரர்கள் அனைத்தையும் கொடுத்தால் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற முடியுமா?” என கேட்க, அதற்குப் பதிலளித்த ஒரு குழு உறுப்பினர், அவர்கள் தங்களுடைய முழு பலத்தையும் காட்டட்டும். இல்லையெனில் பையரிங் (துப்பாக்கி சூடு) நடத்தி போட்டியை முடிக்கலாம். ஏனெனில் நாங்கள் இங்கிருந்து தோற்றம் என்பது உறுதியானது என்று கூறினார். மேலும் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் துப்பாக்கி சூடு நடத்தணும் என்று வன்முறையை தூண்டும் விதமாக விவாத நிகழ்ச்சியின் கூறிய கருத்துக்கள் தற்போது சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக, முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் பாசித் அலி மற்றும் கம்ரான் அக்மல் ஆகியோரும் அந்த விவாதத்தில் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இது குறித்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
