ஆசியக் கோப்பை 2025 சூப்பர் 4 சுற்றுப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்திய அணி, தொடக்க வீரர்களான ஷுப்மான் கில் மற்றும் அபிஷேக் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் வெற்றியின் பாதையில் பயணித்தது.
பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர்களான ஷாஹீன் அப்ரிடி மற்றும் ஹாரிஸ் ரவூஃப்புக்கு எதிராக, இந்திய தொடக்க வீரர்கள் தீவிரமான பதிலடி கொடுத்தனர். பவர்பிளே ஒவர்களில்வே இருவரும் ஆட்டத்தை தங்கள் வசம் வைத்து , 8.4 ஓவர்களில் 100 ரன்களை அடித்தனர்.
ஷாஹீன் அப்ரிடியின் முதல் பந்தையே பவுன்சர் என வந்த நிலையில், அபிஷேக் அதை நேரடியாக மைதானத்திற்கு வெளியே அனுப்பியது ஆட்டத்தின் வீரதீர கம்பீரமான மனப்பாங்கைக் காட்டினார். இதைத் தொடர்ந்து ஷாஹீன், ஹாரிஸ் இருவரும் நாடகத்தை தொடங்கினர் அதாவது தோரணையான வாய் சண்டையில் ஈடுபட்டனர், ஆனால் கில் மற்றும் அபிஷேக் சிறப்பான பதிலடியை சிக்ஸ் ,போர்கள் மூலம் கொடுத்து அவர்களை மெளனமாக்கினர்.
பின்னர் நிகழ்ந்த பந்துகளில் கில், ஷாஹீனை ஒரே ஓவரில் பவுண்டரிகளாக அடித்து “போ பந்தைக் எடுத்துட்டு வா ” கிண்டல் செய்த சமூக ஊடகங்களில் வைரலாகியது.
Things got heated between Abhishek Sharma & Haris Rauf 👀🤬
Watch #INDvPAK LIVE NOW, on the Sony Sports Network TV channels & Sony LIV.#SonySportsNetwork #DPWorldAsiaCup2025 pic.twitter.com/Wt9n0hrtl7
— Sony Sports Network (@SonySportsNetwk) September 21, 2025
“>
ஹாரிஸ் ரவூஃப் மீது கடைசி பவர்பிளே ஓவர்கள் தொடங்கும் நேரத்தில் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து சிக்ஸ், பவுண்டரிகள் அடித்து பாகிஸ்தான் அணியின் நம்பிக்கையை சிதைத்தனர்.
Harris Rauf not goin easily 😀 #INDvPAK pic.twitter.com/xIg1qLP4ds
— Nibraz Ramzan (@nibraz88cricket) September 21, 2025
“>
போட்டிக்குப் பிறகு பேசிய அபிஷேக், “நாங்கள் எந்த உந்துதலும் இல்லாமல் விளையாடினோம். அவர்கள் எங்களை நோக்கி தேவையில்லாமல் சத்தமிட்டனர். எனக்கு அது பிடிக்கவில்லை. அதனால்தான் மேலும் மோசமாக விளையாட நினைத்தேன்” என்றார்.
39 பந்துகளில் 74 ரன்கள் அடித்த அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. போட்டி முழுவதும் பாகிஸ்தான் வீரர்களின் எரிச்சலான செயல்பாடுகளுக்கு பதிலடி கொடுத்த இந்திய வீரர்கள், தங்கள் செயல்பாட்டால் மட்டுமின்றி மொழியிலும் தங்கள் தைரியத்தை நிரூபித்தனர்.
