தமிழகத்தில் நடைபெற்ற பல பயங்கரவாத செயல்களுக்கு பயங்கரவாதி அபுபக்கர் சித்திக் என்பவர் முக்கிய பங்கு வகித்தார். இதனால் காவல்துறையினர் அவரைத் தேடி வந்தனர். இதையடுத்து அபுபக்கர் ஆந்திரா ராயசூட்டி எனும் பகுதியில் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் படி சென்ற காவல்துறையினர் கடந்த ஜூலை மாதம் 1ஆம் தேதி அபுபக்கர் மற்றும் அவருடைய கூட்டாளியான முகமது அலி இருவரையும் கைது செய்தனர்.
அதனைத் தொடர்ந்து இவர்கள் சென்னை புழல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் 2013 ஆம் வருடம் வேலூர் மாநகரில் இந்து முன்னணி மாநில செயலாளர் வெள்ளையப்பன் கொலை செய்யப்பட்டார். அதேபோன்று பா.ஜனதா மாநில பொதுச் செயலாளர் சேலம் ஆடிட்டர் ரமேஷும் கொலை செய்யப்பட்டார். இந்த 2 வழக்குகளிலும் அபுபக்கருக்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக பயங்கரவாத தடுப்பு பிரிவு காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். இதற்கிடையில் அபுபக்கர் மீது 11 வழக்குகளானது இருக்கிறது.
