ஜங்கிள் என்றாலே ஆச்சரியங்கள் நிறைந்த ஒரு மாய உலகம். அங்கு புலி, சிங்கம், சிறுத்தை போன்ற வேட்டையாடும் மிருகங்கள் தங்கள் கம்பீரமான கர்ஜனையாலும், பலத்தாலும் ஆதிக்கம் செலுத்தினாலும், சில நேரங்களில் சிறிய உருவில், பலவீனமாகத் தோற்றமளிக்கும் விலங்குகள் காட்டும் துணிச்சல் நம்மை திகைப்பில் ஆழ்த்தி விடுகிறது.
அப்படி ஒரு அசத்தல் வீடியோ இப்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி, உலகின் மிகத் தைரியமான விலங்கு என புகழப்படும் ஹனி பேட்ஜர் (மீன் தோல் விலங்கு) ஒரு சிங்கக் கூட்டத்தை எதிர்கொண்டு, அவற்றை பயந்து பின்வாங்க வைக்கிறது.
The honey badger just doesn’t care
pic.twitter.com/UKWpS82XAv— Science girl (@gunsnrosesgirl3) September 18, 2025
இந்த வீடியோவின் உண்மையான தைரியமும், நம்பிக்கையும் இருந்தால், உருவமோ, பலமோ ஒரு பொருட்டே இல்லை; வலிமையானவர்களையே திரும்பி ஓட வைக்க முடியும். இந்த ஒரு நிமிடம் 11 வினாடிகள் நீளமான வீடியோவில், ஒரு திறந்த வெளியில் சிங்கங்கள் சுற்றித் திரிய, ஒரு சிங்கம் ஓய்வெடுக்கிறது.
அப்போது ஒரு குகையிலிருந்து ஹனி பேட்ஜர் தோன்றி, சாதாரணமாக சிறிய விலங்குகள் பயந்து ஓடும் இடத்தில், இது சிங்கங்களின் கண்களை நேருக்கு நேர் பார்த்து, சவால் விடும் துணிச்சலைக் காட்டுகிறது. சிங்கங்கள் ஓடவில்லை என்றாலும், அதிர்ச்சியில் பின்வாங்குகின்றன.
இந்த சிறிய ஹனி பேட்ஜரின் தைரியம் அவற்றை திகைக்க வைக்கிறது. இந்த வீடியோவை எக்ஸ் தளத்தில் @gunsnrosesgirl3 என்ற ஐடி-யில் பகிர்ந்துள்ளனர், இதுவரை 36 லட்சத்திற்கும் மேல் பார்வைகளையும், 26 ஆயிரத்திற்கும் மேல் லைக்ஸ்களையும், பலரது கருத்துக்களையும் பெற்று வைரலாகி உள்ளது.
இந்த வீடியோவை பார்த்து, ஒரு பயனர் ‘இவ்வளவு சிறிய உயிரில் இத்தனை தைரியம் எப்படி சாத்தியம்?’ என்று வியந்து கமெண்ட் செய்ய, மற்றொருவர் ‘ஹனி பேட்ஜர் இல்லை, இது வனத்தின் உண்மையான சூப்பர் ஹீரோ!’ என புகழ்ந்துள்ளார்.
இந்தக் காட்சி, ஹனி பேட்ஜரை ஏன் ‘ஃபியர்லெஸ் அனிமல்’ என்று அழைக்கிறார்கள் என்பதை தெளிவாக விளக்குகிறது – இதன் துணிச்சல், வனவிலங்கு உலகில் ஒரு அற்புதமான முன்மாதிரி. இத்தகைய நம்பிக்கை தரும் சம்பவங்கள், வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ளும் தைரியத்தை நமக்கு ஊட்டுகின்றன.
