சீன நாட்டின் ஜியான்யாங் நகரில் பிரபல ஹோட்டல் ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஹோட்டலுக்கு நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் அதிகமான கிளைகள் இருக்கின்றன. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் ஹோட்டலின் ஷாங்காய் கிளைக்கு 2 இளைஞர்கள் சென்றிருந்தனர். இதையடுத்து இளைஞர்கள் மது போதையில் ஹோட்டலின் மேஜை மற்றும் மற்றும் பாத்திரங்களில் சிறுநீர் கழித்து அட்டூழியம் செய்தனர். அதுமட்டுமின்றி இதனை வீடியோவாக எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டனர்.

இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலான நிலையில் ஹோட்டல் பெயருக்கு களங்கம் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து அங்கு சாப்பிட வந்த ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு 10 மடங்கு பணத்தை ஹோட்டல் நிர்வாகமானது வழங்கியது. அதன்பின் நஷ்ட ஈடு வழங்கக்கோரி ஹோட்டல் நிர்வாகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கு விசாரணையில் இளைஞர்கள் 2 பேரும் ஹோட்டல் நிர்வாகத்திற்கு ரூ.3 கோடி அபராதமாக செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.