சமீபத்தில் இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, வாழ்க்கையின் ஆழமான உண்மையை எளிமையான காட்சியில் எடுத்துரைத்திருக்கிறது. இரண்டு ரயில் பெட்டிகளை மட்டும் பயன்படுத்தி, எந்த புத்தகமும் சொல்ல முடியாத பெரிய பாடத்தை இந்த வீடியோ கூறியுள்ளது. அதனால் தான், வீடியோ வெளியானதும் நெட்டிசன்களின் மனதைக் கவர்ந்தது.
जिंदगी में इसलिए पैसा कमाना बहुत ही ज्यादा जरूरी है। 🙁 pic.twitter.com/VnZWFTIPM7
— छपरा जिला 🇮🇳 (@ChapraZila) September 17, 2025
வீடியோவில், ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருக்கும் ரயிலின் இரண்டு பெட்டிகள் காட்டப்படுகின்றன. ஒன்று, சுத்தமாகவும் அமைதியாகவும் இருக்கும் AC பெட்டி. மற்றொன்று, மக்கள் ஏற முடியாமல் கூட்டம் நிரம்பி இருக்கும் ஜெனரல் பெட்டி. ஜென்ரல் பெட்டியில் இடமில்லாமல் பொதுமக்கள் ரயிலின் படிக்கட்டில் தொங்கி கொண்டிருக்கின்றனர். இந்தக் காட்சிக்குப் பின்னர், வீடியோவில் கேட்கப்படும் ஒரு வரி, “ஒரு ஜெனரல் பெட்டியிலிருந்து AC பெட்டிக்குள் வர பலருக்கும் ஒரு வாழ்நாளே தேவைப்படும்.”
இந்த உணர்வுபூர்வமான வீடியோவை `@ChapraZila` என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் பகிர்ந்துள்ளது. இது தற்போது ஆயிரக்கணக்கான பார்வையாளர்களைக் கவர்ந்திருக்கிறது. “ஒரே ஒரு சின்னக் காட்சியில் வாழ்க்கையின் பெரிய உண்மையை சொன்னார்,” என ஒருவர் கருத்து தெரிவித்திருந்தார். மற்றொருவர், “பலரும் வாழ்க்கை முழுக்க உழைத்து குடும்பத்துக்கு நல்ல வசதிகள் தர முயற்சிக்கிறாங்க… சிலர் AC பெட்டி வரைக்கும் வருவாங்க, ஆனா வாழ்க்கை முழுசா முடிந்த பிறகுதான்,” என உருக்கமாகக் கூறியிருந்தார். இந்த வீடியோ, பார்ப்பவர்களின் இதயத்தை நெகிழச் செய்திருக்கிறது.
