ஆஸ்திரேலியாவில் உள்ள மலேனி பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர், சாலையின் நடுவே பெரிய மலைப் பாம்பை சாலையை கடக்க முயன்றதை பார்த்ததும், தைரியத்துடன் பைக்கை நிறுத்தி பாம்பை கையாளும் செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிகழ்வின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அச்சமயம் சாலையில் இருந்த வாகனங்கள் அனைத்தும் நின்று, பாம்பு கடந்து செல்லும் வரை காத்திருந்தன.
View this post on Instagram
பாம்பு சாலையில் இருந்ததால் அது வாகனங்களுக்கு ஆபத்தாக இருந்ததோடு, அதற்கும் உயிர் அபாயம் ஏற்பட்டது. ஆனால் அந்த வாலிபர், எதையும் பொருட்படுத்தாமல் பாம்பை கைகளால் தூக்கி அருகிலுள்ள புதர்களுக்குள் பாதுகாப்பாக விடுகிறார். அந்த வீடியோவில் அவர் மிகவும் அமைதியாகவும் தைரியமாகவும் செயலில் ஈடுபடுகிறார். இந்த செயல் அவருடைய நேர்த்தியான சிந்தனையும், விலங்குகளிடம் உள்ள பாசத்தையும் காட்டுகிறது.
இந்த வீடியோவை பார்த்த அனைவரும் அவரை பாராட்டி வருகிறார்கள். வனவிலங்கு நிபுணர்களும், “இவருடைய செயல் பாம்பின் உயிரை காப்பாற்றியது மட்டுமல்ல, சாலையில் ஏற்பட இருந்த விபத்தையும் தவிர்த்தது” என கூறியுள்ளனர்.
