இணையத்தில் ஒரு தொழிலாளியின் அற்புதமான வேலை செய்யும் திறமை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மணல் பைகளை நிரப்புவதற்கு பல மணிநேரம் உழைப்பும் மெனக்கெடலும் தேவைப்படும் கடினமான பணியை, இவர் ஒரு சாமர்த்தியமான யுக்தியால் சில நிமிடங்களில் முடித்து அசத்தியுள்ளார்.
எக்ஸ் தளத்தில் @UNavodayan என்ற கணக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோ, வெறும் சில நொடிகளில் மக்கள் மனதை வென்று, வைரலாகப் பரவி வருகிறது. இதில், ஒரு தொழிலாளி ஒரு எளிய குழாயைப் பயன்படுத்தி, மணல் பையை எளிதாக நிரப்புவதைக் காணலாம். “இப்படி ஒரு சிம்பிள் ஐடியா இவ்வளவு அட்டகாசமா வேலை செய்யுமா?” என்று பார்வையாளர்கள் ஆச்சரியப்படுகின்றனர்.
रेत भरना आसान नहीं लेकिन थोड़ा दिमाग लगाओ और देखो कमाल 👇
🎥: solvedscience pic.twitter.com/47Rd5hoLlT
— UPENDRA (@UNavodayan) September 17, 2025
வீடியோவில், இந்த தொழிலாளி ஒரு மணல் பையின் அளவுக்கு ஏற்றவாறு ஒரு குழாயை வெட்டி, அதை பையின் உள்ளே வைத்து, மணலை எளிதாக நிரப்புகிறார். இந்த யுக்தியால், பை நேராக நிற்கிறது, மணல் வெளியே சிந்துவதில்லை, பையை பிடித்து நிறுத்த வேண்டிய அவசியமும் இல்லை.
இதனால் நேரமும் உழைப்பும் மிச்சமாகிறது. இந்த எளிய யோசனைக்கு விலையுயர்ந்த கருவிகள் தேவையில்லை, ஒரு சாதாரண குழாயே போதுமானது! இந்த வீடியோவைப் பார்த்தவர்கள், “இவ்வளவு எளிமையான ஐடியா இதுவரை யாருக்கும் தோன்றாமல் போனதே ஆச்சரியம்!” என்று கூறி, அந்த தொழிலாளியின் புத்திசாலித்தனத்தை பாராட்டி வருகின்றனர். இந்த சாமர்த்தியமான வேலை இணையத்தில் பெரும் புயலை கிளப்பி, பலரையும் ஈர்த்து வருகிறது.
