இந்திய மல்யுத்த வீரர் கிரேட் காளி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்து இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அந்த வீடியோவில், காளி ஒரு இளைஞருடன் கை குலுக்குவதைக் காணலாம்.

அந்த இளைஞரின் உயரம், காளியையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. எப்போதும் தனது உயரத்தால் கூட்டத்தில் தனித்து தெரியும் காளி, இம்முறை தன்னை விட உயரமான ஒருவரை சந்தித்து, தனது வியப்பை மறைக்க முடியாமல் புன்னகைத்தார்.

இந்த வீடியோ இணையத்தில் பரவி, ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்து, லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலாகியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by The Great Khali (@thegreatkhali)

வீடியோவில், ஒரு உணவகத்தில் நிற்கும் காளி, எப்போதும் போல் எளிமையான பாணியில் தோன்றுகிறார். ஆனால், அவருக்கு அருகில் நிற்கும் இளைஞரின் உயரத்தைப் பார்த்து, அவரது முகத்தில் தெரிந்த ஆச்சரியம் ரசிகர்களை சிரிக்க வைத்தது.

“முதல் முறையாக எனக்கு யாரையோ பார்க்க தலையை உயர்த்த வேண்டியிருக்கு!” என காளி சிரித்தபடி கூற, அந்த இளைஞர் மரியாதையுடன், “சார், இது எல்லாம் உங்கள் ஆசிர்வாதத்தால் தான்,” என பதிலளிக்கிறார்.

இந்த வீடியோவை காளி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் (@thegreatkhali) பகிர்ந்தவுடன், “கிரேட் காளியை விட கிரேட்டர் காளி!” என்றும், “இவர் உயரத்துக்கு முன் காளியும் சிறியவராக தெரிகிறார்!” என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து, வீடியோவை உற்சாகமாக பகிர்ந்து வருகின்றனர். காளியின் உயரமும், வலிமையும் உலக அளவில் இந்திய மல்யுத்தத்தை பிரபலப்படுத்திய நிலையில், இந்த வைரல் தருணம் அவரது ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக அமைந்துள்ளது.