பெங்களூர் சந்திரா லே-அவுட் பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர் சாபஜ் அலி என்பவரை கடந்த 8 வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இறைச்சி கடை நடத்தி வரும் சாபஜ் அலி குழந்தை இல்லாததற்கு மனைவிதான் காரணம் என்று அடிக்கடி வீட்டில் சண்டை போட்டு உள்ளார். மேலும் தன் மனைவியை கடைக்கு அழைத்துச் சென்று அங்குள்ள இறைச்சி கழிவுகளை சுத்தம் செய்யுமாறு டார்ச்சர் செய்துள்ளார்.
அதுமட்டுமின்றி கடந்த ஒரு வருடத்திற்கு முன் வேறொரு பெண்ணை சாபஜ் அலி திருமணம் செய்துள்ளார். அதன்பின் தன் முதல் மனைவியை விவாகரத்து செய்ய சாபஜ் அலி முடிவெடுத்தார். அதன்படி முதல் மனைவிக்கு செல்போன் மூலம் தொடர்புகொண்டு 3 முறை தலாக் கூறிவிட்டு டைவஸ் செய்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறி செல்போன் மூலம் தலாக் கூறி தன்னை விவாகரத்து செய்திருப்பதாக சாபஜ் அலி மீது அப்பெண் புகார் அளித்தார். அதன்படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
